முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை இன்று(19.05.2023) வழங்கியுள்ளார்.
2011ம் ஆண்டுகளில் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அடிப்படை ஆட்சேபனைகள்
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri