வவுனியா வடக்கில் மேலும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கோவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பிரதேச செயலாளர் மற்றும் சிலருக்கு நேற்றைய தினம் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே பிரதேச செயலாளர் உட்பட மூவருக்கு கோவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினமும் பிரதேச செயலகத்தில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இதுவரை ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலும் இருவருக்கு கோவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
