யாழில் மூன்று மாத குழந்தை திடீரென உயிரிழப்பு!
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(12.4.2026) இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 3 மணியளவில் தாயார் பாலூட்டியுள்ளார்.
அதன்பின்னர் காலை 6 மணியளவில் குழந்தையை பார்த்தவேளை மூக்கினால் பால் வெளிவந்த நிலையில், குழந்தை விறைத்த நிலையில் காணப்பட்டது.
இதன்போது குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காரணமாக குழந்தை உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan