இலங்கைக்கு நிதி ஆலோசனை வழங்க முன் வந்துள்ள முன்னணி சர்வதேச நிறுவனங்கள்!
இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு மூன்று முன்னணி சர்வதேச நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்களே அவையாகும்.
எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக அரசாங்கம் வீதிப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தளவான வெளிநாட்டு நாணய இருப்புடன் , 22 மில்லியன் மக்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா மற்றும் இந்தியா போன்ற இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்தும் அவசர உதவிகளை பெற்று வருகிறது.
இந்தநிலையில் எந்த நிதி ஆலோசகரை பணியமர்த்துவது என்பதை இலங்கை இன்னும் முடிவு செய்யவில்லை
பல தசாப்தங்களில் முதன்முறையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதும் முதல் முறையாகும்.



