சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் புதிய வாகன விதிமுறைகள்
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரப் பொருட்களை அகற்றத் தவறும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதுபோன்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, வாகன ஆய்வாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தடை உத்தரவுகளை பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடைமுறைக்கு வரும் முறை
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரப் பொருட்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பின்னர், தப்பிச் செல்ல முயன்று பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதி ஒழுங்குமுறையை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான குறைபாடு புள்ளிகள் முறை (Demerit Points System) அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan