பிரான்ஸில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை
பிரான்ஸில் பெண் ஒருவரை துன்புறுத்திய இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை, துன்புறுத்திய 48 வயதான வீரசிங்கம் என்பவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுடன் நட்பு இல்லாத போதும் தன்னை காதலிப்பதாக எண்ணிய இலங்கையர், அவரை பின்தொடர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
இந்திய பெண் என எண்ணிய வீரசிங்கம், அவரை தன் காதல் வலையில் வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபட்ட போதும் அவர் வேறு நாட்டவர் என தெரிந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடந்த கொள்ள முயற்சித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ய நிலையில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரசிங்கத்தின் செயற்பாடு காரணமாக அதிர்ச்சி அடைந்த பெண், கடுமையான மனநிலை பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 18 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.