இராணுவத்தினரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் பறிப்பு
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் மூன்று இராணுவத்தினரிடம் இருந்து மூன்று ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆறு மெகசீன்களை ஆர்ப்பாட்டகாரர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெல்லவாய இராணுவ முகாமின் துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்களுக்கு மேலதிகமாக இரண்டு இராணுவத்தினரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் நான்கு மெகசீன்களை ஆர்ப்பாட்டகாரர்கள் பறித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பிகளால் இராணுவத்தினரின் தலையில் தாக்குதல் நடத்தி விட்டு துப்பாக்கிகள் பறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பறித்து செல்லப்பட்ட துப்பாக்கிகள் சம்பந்தமாக வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
