எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்! அமைச்சரின் கோரிக்கை
அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் கப்பல் நேற்று வரவழைக்கப்பட்டதன் மூலம் போதியளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் இந்திய கடன் திட்டத்தின்கீழ் மூன்று கப்பல்கள் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு இதுவரை 400,000 மெற்றிக் தொன் எரிபொருளை இந்தியா வழங்கியுள்ளது.
இதன்படி நேற்று பன்னிரண்டாவது எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைந்தது.
எனவே, நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்களின் விநியோகம் முடியும் வரை எரிபொருளுக்காக வரிசையில் நிற்கவோ அல்லது அதிகமாக நிரப்பவோ வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
