முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுமாத்தளன் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறித்த கடற்றொலாளர்கள் நேற்று (04.05.2024) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இன்று(05) காலை வரை கரை திரும்பாததை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்
முல்லைத்தீவு - உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் திருகோணமலை மற்றும் மன்னாரினை சேர்ந்த இரண்டு நபர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இந்த முறைப்பாட்டினை புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நபரின் மனைவி மேற்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சங்க தலைவரிடம் கேட்டபோது, “ படகு ஒன்றில் கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாத நிலையில் ஏனைய கடற்றொழிலாளர்களின் இரண்டு படகுகள் சென்று தேடியும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
கடற்றொழில் சங்கம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் கடற்படையினர், ஆகியோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஏனைய கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |