நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்! பரிசோதனையில் வெளியான தகவல்
எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் கடந்த 20ஆம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய தந்தை, 15 வயதுடைய மகன் மற்றும் 11 வயதுடைய மகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தந்தை மற்றும் மகனுக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri