நீதிமன்றம் வழங்கிய நேரடியான மூன்று தீர்ப்புகள்
நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் 20 வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் சூழ்நிலையில், நீதிமன்றங்கள் கடந்த இரண்டு வாரங்களில் நேரடியான தீர்ப்புகளை வழங்கி இருந்தன.
அரச சேவைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்தமை இதில் முதலாவது தீர்ப்பாகும்.
இந்த முதலாவது தீர்ப்பு நேரடியான நீதிமன்றம் அல்லாத நிர்வாக மேன்முதுறையீட்டு தீர்ப்பாயம், அரச சேவைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பு எதிராக வழங்கியிருந்தது.
சட்டமா அதிபர திணைக்களத்தின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி விக்ரமசிங்கவுக்கு எதிராக அரச சேவைகள் ஆணைக்குழு வழங்கி இருந்த தீர்ப்பை நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் இரத்துச் செய்தது.
அத்துடன் மீண்டும் பதவியில் அமர்த்துமாறும், கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்குமாறும் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இரண்டாவது தீர்ப்பானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தீர்மானத்திற்கு எதிராக வழங்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதி வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள சட்டங்களை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எதிர்வரும் 26 ஆம் அதிகதி வரை அந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது என தற்காலிக தடை விதித்தது.
இது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக வழங்கப்பட்ட மிகவும் முக்கியமானது தீர்ப்பு.
மூன்றாவது தீர்ப்பானது இலஞ்ச ஆணைக்குழுவின் இரட்டை செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த 12 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பாகும்.
நீதிபதி, இலஞ்ச ஆணைக்குழுவை கடுமையாக சாடியதுடன் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அரசியல்வாதிகள் மீது இருக்கும் அக்கறை சாதாரண மக்கள் மீது இல்லை என நீதிபதி கூறியிருந்தார்.
இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் கையெழுத்திடாது இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரணைக்கு எடுத்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவர்களை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்திருந்தார்.
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்குகளை திரும்ப பெற்றது. மூன்று ஆணையாளர்கள் கையெழுத்திடவில்லை என்று கூறியே வழக்குகளை ஆணைக்குழு திரும்ப பெற்றது.
எனினும் அரசியல்வாதிகள் அல்லாத சாதாரண அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்ற வழக்குகளை மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துடன் தாக்கல் செய்து வழக்குகளை தொடர்ந்தும் நடத்தி வந்தது. இதனை கடுமையாக சாடிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளார்.