நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05.07.2023) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது.
விலங்கு பரிமாற்றத் திட்டம்
இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையும் தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
