தமிழ் அரசுக் கட்சி தலைமை பதவிக்கு முக்கோணப்போட்டி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ள பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் இறுதி தீர்மானம்
எவ்வாறாயினும், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமைத்துவத்திற்கான முக்கோணப் போட்டி குழப்பமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
2024 ஜனவரியில் வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
