நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் - நவகிரி பாடசாலைக்கு அருகில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்றையதினம் (12.06.2023) பதிவாகியுள்ளது.
27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே 6950 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு மற்றும் கோடாவுடன் இருவர் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வாதரவத்தை பகுதியில் இன்று கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 360 லீற்றர் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரவாணி சந்தி பகுதியில் 4 1/2 லீற்றர் கசிப்புடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு
வன்னிவிளாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதியில் காட்டு மரங்களை ஏற்றி சென்ற உழவு இயந்திரமும் மண்ணகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களும், விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பறங்கியாற்றில் உட்பகுதியில் உழவு இயந்திரங்களை இறக்கி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலேயே குறித்த உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உழவு இயந்திரங்கள் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை அதன் சாரதிகள் மூவரை பொலிஸார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
குறித்த உழவு இயந்திர சாரதிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவி்த்தனர்.
செய்தி-கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |