அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்த
மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
