நள்ளிரவில் வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
வவுனியா, வைரவபுளியங்குளம், 6ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
நள்ளிரவில் வீடுபு குந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் கொண்ட குழு, உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த கைத்தொலைபேசிகள், பேஸ், மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சிசிடிவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்து சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த தொலைகாட்சி, சிசிடிவி என்பவற்றையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததில் நேற்றைய தினம் சந்தேகநபர்கள் மூவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
