கந்தளாயில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய மூவர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை ஜன சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சந்தேகநபர்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் அடிப்பாகத்தில் பதினைந்து அடி வரை தொண்டிக் கொண்டியிருந்த போது மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது தோண்டிய இடத்தில் மூன்று அலவாங்கு ஒரு மண்வெட்டி ஒரு சுத்தியல் ஒரு பிளாஸ்டிக் வாளி,கயிறு, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மல்டி வயரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய்
நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .




