5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் யாழில் மூவர் கைது
யாழ். பொலிகண்டி பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களை கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 120 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா என்பன சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே சந்தேக நபர்கள் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 38 மற்றும் 34 வயது உடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




