யாழில் வீடொன்றினை தாக்குமாறு வெளிநாட்டில் இருந்து உத்தரவு! மூவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது டுபாயில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமைய வீட்டிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு
பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து உத்தரவு
அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் போது டுபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படை குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
