இளைஞரைக் கடத்தி கப்பம் கோரிய மூவருக்கு விளக்கமறியல்
கொழும்பு - காலிமுகத்திடலில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திப் பணம் கோரிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்கள்
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், பக்கமுன பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கடந்த 21 ஆம் திகதி கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, தமது மகன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனவும், அவரை விடுவிக்க 10 இலட்சம் ரூபாவைக் கடத்தல்காரர்கள் கோருகின்றனர் எனவும் அவரின் தந்தை பொலிஸில் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |