போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த மூவர் கைது
வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த விடயம் தொடர்பில் பாணந்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2ஆண்களும், 36 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள் மீட்பு
மேலும் விற்பனை செய்த 2 கார்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது 2 போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போலி துறைமுக ஊழியர் அடையாள அட்டை உட்பட பல போலி ஆவணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (19.08.2023) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |