புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது : ஒருவர் தப்பியோட்டம்
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றையதினம் (15.02.2025) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணை
இதன்போது, சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன் அதே பகுதியில் உடமையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 37, 36,29 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
