சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
சட்டவிரோதமாக பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மகியங்கனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |