இருவேறு இடங்களில் மஞ்சள் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் பலர் கைது
தமிழகத்திலிருந்து மன்னார் கடல்வழியாக மஞ்சள் கடத்த முயன்ற மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்புக்குள் மஞ்சளுடன் உள்நுழைந்த மன்னாரைச் சேர்ந்த ஒரு விசைப்படகில் பயணித்த மன்னார் மீனவர்கள் மூவர் கடற்படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 376 கிலோகிராம் மஞ்சளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் கடற்பரப்புக்குள் மஞ்சளுடன் உள்நுழைந்த இந்திய மீனவர்கள் ஐவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் மஞ்சள் தட்டுப்பாட்டையடுத்து தமிழகத்திலிருந்து மஞ்சள் கடத்தும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று தமிழகத்தில் இருந்து ஒரு நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரத்து 400 கிலோகிராம் மஞ்சளே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஐவரும் புத்தளம் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழகம் - தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
