800 கிலோ கழிவு தேயிலை தூளை ஏற்றிச் சென்ற மூவர் கைது!
அனுமதிப்பத்திரம் இல்லாமல் வானில் கழிவு தேயிலை தூளை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் ஹட்டன் - வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (09.04.2023) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை, ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும், 52 பைகளில் சுமார் 800 கிலோ கழிவு தேயிலை தூளை, அக்கரபத்தனையிலிருந்து கம்பளை வெலம்பொட பகுதிக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் ஏற்றிச் சென்றபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸார் வட்டவளையில் நேற்றைய தினம் (09.04.2023) அதிகாலை வானை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விசாரணை
குறித்த வானை சோதனைக்குப்படுத்திய போது, அனுமதிப்பத்திரம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தபட்ட மூன்று சந்தேக நபர்களும் கம்பளை வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேக நபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
