யாழில் தங்க நகைகளை திருடிய மூவர் கைது
இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை
கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றை உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை திருடியுள்ளமை பின் மற்றொரு வீட்டில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது முதன்மை சந்தேகநபரான யாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
