தேயிலையில் கலப்படம் செய்த கும்பல் கைது - 600 கிலோகிராம் கழிவுத் தேயிலை மீட்பு
அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம பிரதேசத்தில் இருந்து நேற்று இரவு(03.07.2026) கம்பளைக்கு கொண்டு சென்ற போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
600 கிலோ கிராம் கழிவுத் தேயிலை மீட்பு
இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், வேனில் இருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுத் தேயிலையை இவ்வாறு கொண்டு சென்று பல்வேறு நிறம் சேர்த்து கழிவு தேயிலையின் தோற்றத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய வகையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் அவர்கள் மூவரும் இன்று(04.07.2026) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.