யாழ்.வட்டுக்கோட்டையில் ஏற்பட்ட கலவரம் : மேலும் மூவர் அதிரடிக் கைது
யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
நேற்றையதினம்(22) மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri