நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது
திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் இன்று (11) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சங்குகளை விற்பனை செய்வதற்காக ஈடுபட்ட வேலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த சங்குகளின் மொத்த பெறுமதி நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது .
நீதிமன்ற விசாரணை
சம்பவத்தில் 45, 33 மற்றும் 39 வயது மதிக்கத்திக்க நபர்களே கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக விசாரனை மூலம் தெரியவருகிறது.
இவர்கள் மூவரையும் ரூபா 05 இலட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 25.03.2025 ஆம் திகதி அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)