நீராவியடிப் பிள்ளையார் ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல்
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசகர் உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(23) கோவிலுக்கு பணிக்காக வருகை தந்த பூசகர் உள்ளிட்டவர்களுக்கு, பொலிஸ், இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பில் ஆலய பூசகர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
பொங்கல் வழிபாடுக
நாங்கள் பொங்கல் வழிபாடுகளை செய்யும் வேளையில் பொலிஸ் தரப்பினரும் இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களால் இன்று (23) காலை தொடக்கம் இப்போதுவரை விசாரனை நடத்தப்பட்டது.
அது தொடர்பாக கேட்டபோது நாங்கள் சிவன் சிலை பிரதிஷ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு கதையை பரப்பியுள்ளார்கள். இதை பரப்பியவர்களை நாம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
நாங்கள் அப்படியான நிலையில் ஆலயத்தை வழிநடத்தவில்லை. எங்களுடைய மூல மூர்த்தியாக இருக்கும் விநாயகப்பெருமானை நாங்கள் மென்மேலும் வழிபட்டு வருகின்றோம். அவருடைய அருள் இருக்குமென்பதை சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
உற்ச்சவத்தை குழப்ப சதி
எந்தவொரு சிலை பிரதிஷ்டை செய்வது வேறு எந்த விதமான நிலைமையும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றார்.
அத்தோடு இன்று பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார் இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் இவ்வாறு பரப்பி ஆலய உற்ச்சவத்தை குழப்ப சதி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
