எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணியப் போவதில்லை - ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி வருகின்றார். எனவே எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை என ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
தவறை சுட்டிக் காட்டியதற்காக
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கதிர்காமம் பாதை யாத்திரை செல்பவர்களுக்கு உணவு வழங்க உணவு பொருட்களை கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் சுட்டிக் காட்டினேன்.
அதற்காக என்னை பழிவாங்க எனக்கு எங்கு காணி இருக்கிறது வீடு இருக்கிறது சொத்து இருக்கிறது என்ன வியாபாரம் செய்கின்றேன் என என்னை அச்சுறுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் எனது வியாபார நிலையத்திற்கு என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.

தவறை சுட்டிக் காட்டியதற்காக என்னை அச்சுறுத்தி வீடு, வர்த்தக நிலையங்களின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாநகரசபைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைத்தார்கள் அப்போது நான் எழுத்து மூலமாக தருமாறு கோரினால் அதை தருகின்றேன் என்று தெரிவித்தேன்.
எத்தனை இடங்களில் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருக்கிறது என்னை பழிவாங்க செலவு செய்த 10 ஆயிரம் ரூபாவுக்கு இந்த வீதி மின்விளக்கு இல்லாததற்கு செலவு செய்திருக்கலாம்.
கல்லடி பாலத்தில் பல தடவைகள் மின்சார விளக்குகள் ஒளிராமல் இருந்துள்ளது. இது தொடர்பாக முகநூல்களிலும் தொலைபேசி ஊடாகவும் ஊடகங்கள் ஊடாகவும் மக்கள், மாநகர சபை முதல்வரிடம் பல கோரிக்கைகள் முன்வைத்தும் அதற்கான செயற்பாட்டைச் செய்யாமல் தவறை சுட்டிக் காட்டுபவர்களை பழிவாங்கும் நோக்கோடு தான் மாநகரசபை முதல்வர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.
தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும்போது
போலி தேசியத்தை பேசிக் கொண்டு பிழைகளை சுட்டிக்காட்டினால் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு எதிராக செயற்படாமல் தடுக்க இவ்வாறு அச்சுறுத்துகின்றனர்.
இவ்வாறுதான் நான் இன்று கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உழவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தி பொய்யான வழக்குகள் போட முடியுமா என பார்க்கின்றனர்.

எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை. இவர்களுக்காக மட்டும் அல்ல வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அவர்களுக்காக எந்த நேரத்திலும் குரல் கொடுப்பேன்.
எனக்கு எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எங்கு தமிழ் மக்களுக்கு எதிராக தவறு நடக்கின்றதோ தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும் போது அதனை சுட்டிக்காட்டுவேன் என்றும் குறிப்பிட்டு்ள்ளனர்.