நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்: காரணத்தை வெளியிட்டார் ஜீ.எல்.பீரிஸ்
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறும்போது, புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத அவலநிலையினாலேயே அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
நேற்றைய தினம் (10.07.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு என்பது சட்டவிரோதமானது எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டவிரோதச் செயல்கள்
மேலும், பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் நிலவும் இழுபறி நிலை காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் போன்ற சட்டவிரோதச் செயல்கள் பெருகிவிட்டது.
அதனைக் கட்டுப்படுத்த திறமையான பொலிஸ் சேவை தேவை.
மாற்றியமைக்க முடியும்
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், பிரதமரிடம் உள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மிகவும் பலம்பொருந்தியதாக மாறும்.
இதனால் பிரதமர் சர்வ வல்லமை படைத்தவராக இருப்பார். இவ்வாறு மாறினால் பிரதமரால் தனக்கு ஏற்றவாறு உள்ளூராட்சி, மாகாண சபைகளை மாற்றியமைக்க முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
