தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - கத்தோலிக்க திருச்சபை விடுத்துள்ள கோரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கூற்றுக்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை கவனம் செலுத்தியுள்ளது என்று வணக்கத்துக்குரிய சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தபடலாம் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
யார் இந்த தாக்குதலை நடத்துகிறார்கள் என்று தனக்குத் தெரியும் என்றும், அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அதிகாரிகள், இந்தக் கூற்றுக்களை விசாரிக்க வேண்டும், அத்துடன் அத்தகைய தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கேட்டுள்ளது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan