ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: சைவ மகா சபை கண்டனம்!
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ஓர் கிறிஸ்தவ மத குழுவினர் யாழில் தனியார் பத்திரிகை நிறுவனத்தின் மீது மேற்கொண்ட அடாவடிகளை வன்மையாகச் சைவ மகா சபை கண்டித்துள்ளது.
நேற்றைய தினம் (09.04.2023) சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சந்தித்து வரும் மத மாற்றக் குழுக்கள் உண்மையை வெளிப்படுத்தியதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயம் கிடைப்பதற்கு வழிகோலும் வகையில் செய்தியைப் பிரசுரித்தமைக்கு ஊடகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்ற செயலானது மிலேச்சத்தனமானது.
மதக்குழுக்களின் செயற்பாடு
கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய பற்றுக்காக அது சார்ந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டமைக்காக பலமுறை தாக்கப்பட்ட மிகத் துயரமான சம்பவங்களை இந்த ஊடகம் சந்தித்துள்ளது.
அந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட வலியை விட தற்போது மண்ணின் மக்கள் சார்ந்த மனிதநேய செய்திக்காய் புதிதாய் சொந்த மண்ணில் முளைக்கும் குழுக்களால் அச்சுறுத்தப்படுவது மிகுந்த துயரத்தைத் தருகின்றது.
சமூக நீதி
இவ்வாறான குழுக்கள் சமூக அமைதி மத நல்லிணக்கத்திற்கு மட்டுமன்றி ஊடக சுதந்திரத்திற்குமே பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது இன்று நிதர்சனமாகியுள்ளது.
உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்பட
வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து மரபார்ந்த சமயத்
தலைவர்களும் இவ்வாறான மதக்குழுக்களின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்து சமூக
நீதியையும் மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதியையும் தடுத்து பத்திரிகை
சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
