கொழும்பிலுள்ள நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது
கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்தை தாக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு மூலம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் அமைந்துள்ள 'தி ஃபாரின் இன்டர்நேஷனல் ரிலேஷன்' என்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், தமது நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற முறைப்பாட்டை செய்துள்ளார்.
விசாரணைகளைத் தொடர்ந்து, முன்னாள் விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரத்நாயக்க என்பவரே கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




