நாட்டில் மீண்டும் அச்சுறுத்தல் நிலை
நாட்டில் கோவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பை காட்டுவதுடன், படிப்படியாக மீண்டும் அச்சுறுத்தலான நிலையொன்றை நோக்கி நகர்கின்றோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களே அதிகளவில் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் மரணித்தும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போன்று நாட்டில் மீண்டும் கோவிட் -19 வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரையிலான தரவுகளின் படி, வரைபில் உயர்வு நிலையொன்றை காட்டுகின்றது.
அப்படியென்றால் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்றே அர்த்தமாகும். கடந்த காலங்களில் மக்கள் அச்சத்தின் மத்தியில் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டனர், ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து மக்கள் விடுபட்டு வருகின்றமை இதற்கு பிரதான காரணமாகும்.
மேலும் தற்போது வரையில் அடையாளம் காணப்பட்டு வரும் கோவிட் தொற்றாளர்களில் அதிகமானோர், எந்தவித தடுப்பூசியும் ஏற்றிக்கொள்ளாத நபர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். அதேபோல் கடந்த 23 ஆம் திகதிக்கான கோவிட் மரணங்களாக 52 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மரணித்தவர்கள் வயதானவர்கள், மற்றும் தடுப்பூசி ஏற்றாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்கள் விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் பயன்பாட்டில் உள்ள சகல தடுப்பூசிகளும் தரத்தில் சிறந்தவையேயாகும்.
அனைத்துமே 90 வீதத்திற்கு அதிகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆகவே மக்கள் அச்சமின்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
