முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவு - சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான வெடிக்காத துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றையதினம் (14.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதி காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
வெடிக்காத நிலையில்..
அதனையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது T56ரக துப்பாக்கி ரவைகள் உர பையினில் இருப்பது அவதானிக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்திற்கிடமான வகையில் மீட்கப்பட்ட உரபையில் இருந்துT56ரக துப்பாக்கி ரவைகள் 1400 வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை முல்லைத்தீவு பொலிஸார் மீட்டெடுத்து பாெலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவை வெடிக்காது பழுதடைந்த நிலையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
