ஆயிரம் பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்!
உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சால் நேற்று நாடாளுமன்றத்தில் ஆயிரம் பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிடும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 1000 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிடும் யோசனைக்கு அரச நிதி பற்றிய குழுவால் நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கப்பட்டது.
அரச நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கூடியபோது தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையின் மத்தியில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்தக் கூட்டத்தை நடத்தும் நோக்கில் அரச அதிகாரிகள் ஒன்லைன் முறையின் ஊடாக இதில் இணைந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, முஜிபுர் ரஹ்மான், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அனுப பஷ்குவல், பேராசிரியர்ரஞ்சித் பண்டார, நளின் பெர்னாந்து மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல, தற்போது காணப்படும் வரையறையான 2 ஆயிரம் பில்லியன் ரூபா பெறுமதியை 3 ஆயிரம் பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு இதன் ஊடாக எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அத்துடன் இந்தத் தொகையை 6 மாதகாலங்களுக்குள் செலவு செய்வதற்கு
எதிர்பார்க்கவில்லை என்றும், நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட கடன் பெறும்
எல்லைக்குள் சகலவற்றையும் நிர்வாகம் செய்வதாகவும் செயலாளர் மேலும்
தெரிவித்தார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
