விபத்துக்குள்ளான படகு சேவையை இயக்கியவர்கள் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பி ஓட்டம்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் விபத்துக்குள்ளான படகு சேவையை இயக்கியவர்கள் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (24) கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் (M. S.Thowfeek) வீட்டின் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri