ஹட்டனில் மரை வேட்டையாடி விற்பனை செய்தவர்கள் கைது! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
ஹட்டன் - நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் பகுதியில் மரைகளை வேட்டையாடி இறைச்சியாக விற்பனை செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மரைகள் இருப்பதால், குறித்த நபர்கள் இருவரும் கம்பி வலை பயன்படுத்தி நீண்ட காலமாக வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 54 கிலோகிராம் எடையுடைய கம்பி வலை மற்றும் மரை இறைச்சி மீட்கப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் வனப்பகுதி அதிகாரி கவிது ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
18 நாட்கள் விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட இருவரும் நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
விசாரணையின் பின்னர், இரண்டு சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட இறைச்சியுடன் நேற்று (10) இரவு ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இருவரையும் 18 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மீட்கப்பட்ட மரை இறைச்சியை மண்ணெண்ணெய் பயன்படுத்தி அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan