நாடாளுமன்றில் சத்தமிடும் எதிர்க்கட்சியினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடாளுமன்றில் அதிகம் சத்தமிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரிசையாக சிறைக்குச் செல்ல நேரிடும் என ஆளும் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதிகம் கூச்சலிடுபவர்கள் சிறைக்கு செல்லுவர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்கா தெரிவித்துள்ளார்.
"பாராளுமன்றத்தில் அதிகமாக கத்தும் எதிர்க்கட்சியினர் பட்டியலை முறையே அமைத்தால், சிறைக்கு செல்லும் பட்டியலாக அது மாறும்" என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்குச் சென்றுள்ளதை அவர்கள் அறிவார்கள். இதனால், அவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் விசாரணைகளுக்கு அஞ்சி நாடாளுமன்றில் கூச்சலிடுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அவர்கள் அதிகமாகக் கத்துவதாகவும், பாராளுமன்றத்தில் கூச்சலிடும் வரிசைபடி அவர்கள் சிறைக்குச் செல்வதை உறுதி செய்யலாம் என தினிந்து ஹென்னாயக்கா தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றும் போது இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.