தனிமைப்படுத்தப்படுபவர்கள் பயப்பட தேவையில்லை! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு
கொரோனா தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 1284 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.மதன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் தொற்றாநோய்கள் கொண்ட நபர்கள் பிரத்தியேகமாகக் கவனிக்கப்படுவதாகச் சிகிச்சை நிலைய மருத்துவர் எஸ்.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி,
தற்போதைய நிலையில் டெங்கு நோய்த் தொற்று நிலைமை யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலே காணப்படுகின்றது.
எனினும் தற்போது மழை பெய்ததன் காரணமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமிடத்து டெங்கு நோய் தாக்கத்திலிருந்து யாழ் மாவட்டத்தினை பாதுகாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri