தலவாக்கலையில் தீக்கிரையான லயன் குடியிருப்பு: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
தலவாக்கலை - ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
இதனால் 24 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் உள்ள பொது கலாசார மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்று வருடங்களாக அக்கலாசார மண்டபத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீட்டுத் திட்டம்
இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது, கடந்த 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
எனினும் பொது கலாசார மண்டபத்தில், சேலைகள், போர்வைகளால் மறைத்து பலர் வாழத் தொடங்கியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

அடுத்தவர் வாழ்வை நாசமாக்க.... சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம் திறந்த ஹன்சிகா News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
