இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மாலை மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது
ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 கடற்தொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 30 கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
