யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் (Video)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்குக் கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகிறது.
பெருங்கடலுக்குச் சென்று கடல் நீர் எடுத்து விளக்கு எரிக்கும் வைபவம் நேற்று முன்தினம் (26.06.2023) ஆரம்பமானது.
மேலும், இந்த வருட ஆடிக் குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டுள்ளன.
சம்பிரதாய பூர்வ வைபவம்
நள்ளிரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங்கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்குச் சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில், கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் நடத்தியுள்ளனர்.
மேலும், ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) வரையான ஒரு வாரக் காலத்திற்குக் கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாய பூர்வ வைபவம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |