தியத்தலாவ பகுதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
புதிய இணைப்பு
தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நால்வரும் குறித்த பந்தயப் போட்டியில் கடமையாற்றிய அதிகாரிகள் என்பதுடன், சிறுமியைத் தவிர உயிரிழந்த ஏனைய அனைவரும் ஆண்கள் ஆவர்.
இரண்டாம் இணைப்பு
தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 6 பேர் விபத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயிரிழந்தவர்களுள் ஒரு குழந்தையும் நான்கு டிராக் மார்ஷல்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
தியத்தலாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காரோட்ட பந்தயம்
குறித்த பகுதியில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam