அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது: செலவும் அதிகம்
அரசு ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்தன என்று ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayakke) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்
இதன்போது, “பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஐ.எம்.எப்பிடம் செல்வதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லையா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த சாகல ரத்நாயக்க,
நிச்சயமாக IMF வழங்கும் கடனால் மாத்திரம் பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை.

அதற்காக நாம் இப்போது வருமானத்தின் அளவை அதிகரிக்கும் திட்டத்திற்குள் செல்ல வேண்டும்.
அவ்வாறு செய்தால் எம்மால் நாடு என்ற வகையில் மகிழ்ச்சியடைய முடியும். அரசு ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்டது.
எனினும் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்தன. எனவே, வருமானத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
நான் அடிக்கடி கூறும் விடயம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri