தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை தடைசெய்யகோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமனறம் தள்ளுபடி செய்துள்ளது.
திலீபனின் ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த பொலிஸார் நேற்றைய தினம்(22.09.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு பொலிஸ் பிரதேசங்களிலும் குறித்த நினைவேந்தலுக்கு தடைகோரி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
பொலிஸாரின் பல்வேறு காரணிகள்
அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற குறித்த நிகழ்வை பல்வேறு காரணங்களை காட்டி தடை செய்வதற்காக பொலிஸார் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் நீதிமன்றங்கள் தடைசெய்ய மறுத்து வருகின்றன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து பொலிஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த தடையுத்தரவுகள் வழங்கப்படாமல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டதோடு மக்கள் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்க முடிந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.