நீதிமன்றில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பொலிஸார்: கஜேந்திரன் விசனம் (Video)
விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (20.09.2023) தியாக தீபம் திலீபனின் பேரணியை தடைசெய்வது தொடர்பில் யாழ்.நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவாதத்தின் பின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடுக்கும் வகையில் பொய்யான பிழையான தகவல்களை நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு நினைவேந்தல்கள் உரிய முறையில் நடைபெறுவதற்கான கட்டளை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்த அரசாங்கமானது பொலிஸ் திணைக்களத்தை பயன்படுத்தி ஜனநாயக குரல்களை நசுக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
