சவால்களுக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 38 ம்ஆண்டு நினைவு தினம் கடந்த 15ஆம் திகதியில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளிலும், சர்வதேசத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை சிவன்கோவில் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்த தினம் கடந்த 15.09.2025 அன்றிலிருந்து மக்களாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாலும் திலீபனின் திருவுருவப்படத்திற்கு பொது சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த 4 நாட்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (19) காலை பொலிஸாரால் திருவுருவப்படம் அகற்றப்பட்டதுடன், நினைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களும் சேதமாக்கப்பட்டன.
இந்நிலையில் பல சவால்களுக்கு மத்தியிலும் புதிதாக தியாக தீபம் திலீபனுக்காக இன்னுமொரு திருவுருவப்படம் தாயார்படுத்தப்பட்டு 05ஆம் நாள் நினைவு கூரலும் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவு கூரலின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான கண்டனமும் சமூக செயற்பாட்டாளர்களால் ஊடகங்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டது.







